2010-11-26 14:57:21

பாக்தாத் ஆலயத்தில் இறந்தவர்களுக்காக கர்தினால் Leonardo Sandri நிறைவேற்றிய திருப்பலி


நவ.26, 2010. பாக்தாத்தில் அக்டோபர் இறுதியில் ஞாயிறுத் திருப்பலியின்போது கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் வத்திக்கான் அதிகாரி ஒருவர் இவ்வியாழனன்று திருப்பலி நிறைவேற்றினார்.
அக்டோபர் 31ம் தேதி பாக்தாத் மீட்பின் அன்னை ஆலயத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கீழைரீதி சபைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri இவ்வியாழனன்று வத்திக்கானில் திருப்பலி நிறைவேற்றினார்.
இத்தாக்குதலில் காயமுற்றவர்களில் சிலர் உரோமையிலுள்ள Gemelli மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இத்திருப்பலியில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்காகச் செபித்தனர்.இத்தாக்குதல் நடைபெற்ற பாக்தாத் மீட்பின் அன்னை ஆலயம், ஈராக்கில் பல்வேறு சபைகளாகவும், ரீதிகளாகவும் பிரிந்துள்ள கிறிஸ்துவர்களை ஒன்றிணைக்கும் ஓர் உயர்ந்த அடையாளமாக மாறியுள்ளதென்று ஈராக் நாட்டைச் சேர்ந்த அருள்தந்தை Aysar Saaed ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.