2010-11-25 15:18:51

எகிப்தில் இரு காப்டிக் கத்தோலிக்க இளைஞர்கள் கொல்லப்பட்டனர்


நவ.25, 2010. எகிப்தின் பிரமிடுகள் பகுதியில் கட்டப்பட்டு வரும் காப்டிக் கத்தோலிக்கக் கோவில் ஒன்றை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் தடை செய்துவரும் பிரச்சனையில், இப்புதனன்று இரு காப்டிக் கத்தோலிக்க இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
Talbiya என்ற இடத்தில் அரசின் அனுமதியுடன் கட்டப்பட்டு வரும் தூய மரியா மற்றும் மிக்கேல் ஆலயம் முடிவடையும் நிலையில் உள்ள இந்த நேரத்தில், கடந்த ஞாயிறு முதல் காவல் துறைக்கும் காப்டிக் கத்தோலிக்கர்களுக்கும் மோதல்கள் ஆரம்பமாயின.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் தூண்டுதலால் கோவில் கட்டுமானப் பணிகளைத் தடை செய்யும் உள்ளூர் காவல் துறை, அத்துமீறி கோவில் வளாகத்தை சுற்றி வளைத்ததால் ஏற்பட்ட இந்த மோதல்கள் வலுத்து, இப்புதனன்று இரு காப்டிக் கத்தோலிக்க இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.Talbiya பகுதியில் பத்து இலட்சம் காப்டிக் கத்தோலிக்கர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு ஒரு கோவிலும் அப்பகுதியில் இல்லை என்றும், எந்த ஒரு வழிபாட்டுக்கும் அவர்கள் பல கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளதென்றும் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.