2010-11-24 15:45:49

எகிப்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை அதிகரிப்பு, கிறிஸ்தவப் பணியாளர் கவலை


நவ.24,2010. எகிப்தில் இடம் பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் கிறிஸ்தவ வீடுகளும் அவர்களின் தொழில் மையங்கள் எரிக்கப்படுவதும் அவை சூறையாடப்படுவதும் அந்நாட்டுக் கிறிஸ்தவ சமூகம் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

எகிப்தில் வருகிற ஞாயிறன்று தேர்தல்கள் நடைபெறவிருப்பது வன்முறைகள் அதிகரித்து வருவதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று கிறிஸ்தவப் பணியாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசு விரும்புவது, கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்று தான் அஞ்சுவதாகத் தெரிவித்தார் அப்பணியாளர்.

முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எகிப்தின் சுமார் 8 கோடியே 30 இலட்சம் பேரில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இக்கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.