மஹாராஷ்டிர அரசின் கடும் நடவடிக்கையினால் விவசாயிகள் இறப்பு அதிகரிக்கக்கூடும், தலத்திருச்சபை
கவலை
நவ.23,2010. மேற்கு இந்தியாவில் விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு அரசு அவர்களைக்
கட்டாயப்படுத்துவதாலும் மின்வெட்டுக்களாலும் அவ்விவசாயிகள் மத்தியிலான இறப்புகள் மேலும்
அதிகரிக்கக்கூடும் என்று திருச்சபை மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிர
மாநிலத்தின் விதார்பா பகுதியில் இவ்வாண்டு அறுவடை பொய்த்ததால் கடந்த ஜனவரியிலிருந்து
சுமார் 667 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந் நிலையில், அரசின் இந்நடவடிக்கைகள்,
தங்கள் வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப முயற்சிக்கும் அம்மக்களைத் துன்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது
என்று அப்பகுதியில் திருச்சபையின் சமூகநலப் பணிகளை ஒருங்கிணைக்கும் அருள்திரு பிரான்சிஸ்
தாப்ரே தெரிவித்தார்.
குடிமக்கள் மாண்புடன் வாழ வழி செய்ய வேண்டியது அரசின் கடமை
என்பதையும் அக்குரு இத்திங்களன்று சுட்டிக் காட்டினார்.
மஹாராஷ்டிர மாநில அரசின்
மின்வாரியம் மின்சார விநியோகத்தைக் குறைத்த பின்னர், ஏறக்குறைய ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்
விவசாயிகள் பசிச்சாவுகளையும் தற்கொலைகளையும் எதிர்நோக்குகின்றனர். மேலும் 5,20,000 விவசாயிகள்
இதே நிலைக்கு உட்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது