2010-11-23 15:30:01

நவம்பர் 24 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1859 – ‘உயிரினங்களின் தோற்றம்’ (On the Origin of Species) என்ற நூலை சார்ல்ஸ் டார்வின் வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
1926 - புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
1944 - இரண்டாம் உலகப் போரில் டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் தாக்குதல் செய்தன.
1963 – அமெரிக்க அரசுத் தலைவர் கென்னடியைச் சுட்ட லீ ஹார்வி ஆஸ்வல்டை ஜாக் ரூபி சுட்டுக் கொன்றார். இந்தக் கொலை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
1965 - ஜோசப் மொபுட்டு காங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் 1971ல் காங்கோவின் பெயரை சாயீர் என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் 1997ல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.1969 – நிலவுக்கு இரண்டாம் முறையாக மனிதர்களைக் கொண்டு சென்ற அப்பல்லோ 12 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.







All the contents on this site are copyrighted ©.