2010-11-23 15:24:19

தேவ நிந்தனைக் குற்றத்திற்காக பாகிஸ்தானில் மரணதண்டனை தீர்ப்பு பெற்றவர் விடுதலை


நவ 23, 2010. தேவ நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஆசியா பீபி என்பவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

இவரின் விடுதலைக்காகச் சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிபர் இவரை மன்னித்து விடுவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் பணிபுரியும் பண்ணைத் தொழிலளர்களுடன் கடந்த ஆண்டு ஏற்பட்ட வாய்ச்சண்டையைத் தொடர்ந்து, தேவநிந்தனைக் குற்றம் சாட்டப்பட்ட ஆசியா பீபிக்கு கடந்த மாதம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம்.

கடந்த புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இவரின் விடுதலைக்காக விண்ணப்பம் ஒன்றை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாகிஸ்தான் அரசுத்தலைவரின் விண்ணப்பத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ள ஆசியா பீபி, தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இத்தகைய பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, நீதி மன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்கள் பின்னர் மதத்தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டதும் இத்தலைமறைவு வாழ்க்கைக்கானக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.