2010-11-22 16:08:12

பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டம் மறு பரீசலனைக்கு எடுக்கப்பட உள்ளது


நவ.22, 2010. பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டம் மறு பரீசலனைக்கு எடுக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பம் பாகிஸ்தானின் அடுத்த தேசிய அவைக்கூட்டத்தில் வைக்கப்படும் என அறிவித்துள்ளார் அந்நாட்டு பாராளுமன்ற அங்கத்தினர் ஷெர்ரி ரஹ்மான்.

இத்தகைய ஒரு முயற்சி அந்நாடு தன்னை மதத்தீவிரவாதப் போக்குகளிலிருந்து விடுவித்துக்கொள்ள உதவுவதாக இருக்கும் என, இத்திட்டத்திற்கு ஆதரவளிப்போர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தேவ நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஆசியா பிபி என்பவரின் வழக்கு குறித்து புதிய அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை தயாரிக்கும்படி பாகிஸ்தானின் சிறுபான்மையினருக்கான அமைச்சரை விண்ணப்பித்துள்ளார் அரசுத்தலைவர் அலி சர்தாரி. இவ்வமைச்சர் Shahbaz Bhattiயும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆளுனர் Salman Taseer ம் இத்தேவநிந்தனை வழக்கு குறித்த புது விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.