2010-11-20 15:20:53

பிரிட்டனில் கத்தோலிக்கத் திருச்சபையில் முழுவதுமாக இணையவிருக்கின்ற ஆங்லிக்கன் சபையினருக்கெனத் தனிப்பட்ட திருஆட்சி பீடம்


நவ.20,2010. பிரிட்டனில் வருகிற ஜனவரியில் கத்தோலிக்கத் திருச்சபையில் முழுவதுமாக இணையவிருக்கின்ற ஆங்லிக்கன் சபையினருக்கென மறைமாவட்டத்தையொத்தத் தனிப்பட்ட திருஆட்சி பீடத்தை உருவாக்கவிருப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் அறிவித்தனர்.

ஐந்து ஆங்லிக்கன் ஆயர்கள் உட்பட முப்பது குழுக்களாகப் பல குருக்களும் பொதுநிலை விசுவாசிகளும் வருகிற ஜனவரியில் கத்தோலிக்கத் திருச்சபையில் முழுவதுமாக இணையவிருக்கின்றனர்.

வருகிற ஜனவரியில் புதிதாக அமைக்கப்படவிருக்கின்ற இந்தத் திருஆட்சிப் பீடம் குறித்து இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் அறிவித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் துணை ஆயர் ஆலன் ஹோப்ஸ், இந்த அமைப்பு, ஆங்லிக்கன் சபையிலிருந்து புதிதாக இணைவோரை ஏற்கும் என்று கூறினார்.

புதிதாகச் சேரும் குருக்களுக்கும் பொதுநிலை விசுவாசிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் வருகிறப் புனித வாரத்தில் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் ஆயர் ஹோப்ஸ் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.