2010-11-20 15:23:51

நவம்பர் 21 : சாலை விபத்துக்களில் இறப்போரை நினைவுகூரும் உலக தினம்


நவ.20,2010. உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13 இலட்சம் பேர் வீதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் விபத்துக்களினால் இறக்கும் வேளை இந்த இறப்புகள் தொடர்ந்து இடம் பெறுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

சாலை விபத்துக்களில் இறப்போரை நினைவுகூரும் உலக தினம் நவம்பர் 21ம்தேதி இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செயதி வெளியிட்ட மூன், எளிதான நடவடிக்கைகள் மூலம் இவ்வுயிரிழப்புக்களைத் தடை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

“சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கானப் பத்தாண்டுத் திட்டம்” 2011ம் ஆண்டு மே 11ம் தேதி தொடங்கப்படும் போது நாடுகள் இது குறித்தத் தங்களது தேசியத் திட்டங்களை வெளியிடும் என்ற தனது எதிர்பார்ப்பையும் ஐ.நா.பொதுச் செயலர் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம், “சாலைப் பாதுகாப்புக்கானப் பத்தாண்டு திட்டத்தை” அடுத்த ஆண்டு மே 11ம் தேதியன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.