2010-11-20 15:22:50

உலகாயுதப் போக்கை எதிர்ப்பதற்கு வத்திக்கான் சிறந்தக் கூட்டணி - இரஷ்ய ஆர்த்தாடாக்ஸ் சபைத் தலைவர்


நவ.20,2010. தற்சமயம் உலகில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள உலகப் போக்குகளிலிருந்து குடும்பம் மற்றும் மனித விழுமியங்கள் குறித்த மரபுரீதியான கூறுகளைப் பாதுகாப்பதற்கு கத்தோலிக்க மற்றும் ஆர்த்தாடாக்ஸ் திருச்சபைகள் சேர்ந்து செயலாற்றி வருகின்றன என்று இரஷ்ய ஆர்த்தாடாக்ஸ் சபைத் தலைவரான முதுபெரும் தந்தை கிரில் கூறினார்.

இவ்விரு திருச்சபைகளும் இறையியல் உரையாடலில் சிக்கல்களை எதிர்நோக்கினாலும் மரபுரீதியான குடும்பம் மற்றும் மனித விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு வத்திக்கான் சக்திவாய்ந்த கூட்டணி என்று மாஸ்கோவில் இவ்வெள்ளியன்று தெரிவித்தார் முதுபெரும் தந்தை கிரில்

இவ்விரு திருச்சபைகளும் சேர்ந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புக்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உருவாக்கி வருகிறார் என்றும் இரஷ்ய ஆர்த்தாடாக்ஸ் சபைத் தலைவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.