2010-11-19 16:09:24

நவம்பர் 19 சிறார் மீதான வன்கொடுமைத் தடுப்பு தினம்


நவ.19,2010. சிறார் உரிமைகள் குறித்து சர்வதேச அளவில் உடன்பாடுகள் தற்சமயம் இருக்கின்றதையும் விடுத்து வன்முறைக்கும் தவறானப் பயன்பாடுகளுக்கும் இலட்சக்கணக்கானச் சிறார் உட்படுத்தப்படுகின்றனர் என்று ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Marta Santos Pais கூறினார்.

சிறார் மீதான வன்கொடுமைத் தடுப்பு தினம் இவ்வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டதையடுத்து செய்தி வெளியிட்ட Santos Pais, சிறார்க்கெதிரான வன்முறை மறைவாகவும் சமூகரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இருக்கின்றது என்று கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரானக் கொடுமைகளைத் தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவம்பர் 19ம் தேதி குழந்தைகள் மீதான வன்கொடுமைத் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2000ம் ஆண்டு உலக பெண்கள் மாநாட்டு நிறுவனம் விடுத்த கோரிக்கையின்படி இத்தினம் உருவாக்கப்பட்டது. குழந்தைகளுக்கான உரிமையைப் பெற்றுத்தருவது மற்றும் அவர்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகளைத் தடுப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கம்.







All the contents on this site are copyrighted ©.