2010-11-19 16:04:06

திருத்தந்தை 2011ல் ஜெர்மனிக்குத் திருப்பயணம் - ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர்


நவ.19,2010.திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற ஆண்டில் ஜெர்மனிக்குத் திருப்பயணம் மேற்கொள்வார் என்று ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Robert Zollitsch அறிவித்தார்.

ஜெர்மன் அரசுத் தலைவர் Christian Wulff மற்றும் ஜெர்மன் ஆயர் பேரவை விடுத்த அழைப்பைத் திருத்தந்தை ஏற்றுக் கொண்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என்றுரைத்த பேராயர் Zollitsch, இத்திருப்பயணம் 2011ம் ஆண்டு செப்டம்பரில் இடம் பெறக்கூடும் என்று இவ்வியாழனன்று தெரிவித்தார்.

இத்திருப்பயணம், ஜெர்மன் நாடு மற்றும் ஜெர்மன் திருச்சபையின் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றதாய் இருக்கும் என்றும் பேராயர் Zollitsch கூறினார்.

இதற்கு முன்னர் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் 21 வரையிலும், 2006ம் ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் ஒன்று வரையிலும் ஜெர்மனிக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்







All the contents on this site are copyrighted ©.