2010-11-17 15:05:03

இத்தாலியில் கடந்த பத்தாண்டுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 50 இலட்சம் அதிகரித்துள்ளது


நவ.17, 2010. இத்தாலியில் குடியேறுகிறவர்களின் புள்ளிவிபரக் கணக்கு குறித்த இருபதாவது தொகுப்பை இத்தாலிய காரித்தாஸ் மற்றும் குடியேற்றதாரர் அமைப்பின் 50 பிரதிநிதிகளைக் கொண்ட குழு இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தது.திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட இத்தொகுப்பின்படி, 2000த்துக்கும் 2010த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தாலியில் குடியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 50 இலட்சம் அதிகரித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.