2010-11-17 15:01:08

ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் எதிர்ப்பு


நவ.17, 2010. மேலும், Asia Bibi க்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் Rufin Anthony, தேவ நிந்தனைச் சட்டம் தங்கள் நாட்டில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறதென்று கூறினார்.
தேவ நிந்தனைச் சட்டம் பாகிஸ்தானில் ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் அமைதி மற்றும் நீதிக் குழுவினர் சென்ற ஆண்டு நடத்திய ஒரு கையெழுத்து போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடம் இருந்து 75,000 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
Asia Bibi க்கு எதிராக மரண தண்டனை வழங்கப்பட்ட இந்த சில நாட்களில் அரசு சாரா அமைப்புக்கள், பெண்களின் இயக்கங்கள் 40,000 க்கும் அதிகமான கையெழுத்துக்களைத் திரட்டி, அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வருகின்றனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.Asia Bibiக்கு வழங்கப்பட்டுள்ளத் தீர்ப்புக்கு எதிராகவும், பாகிஸ்தானிலிருந்து தேவ நிந்தனை சட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ், இத்தாலி, இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய பல நாடுகளிலிருந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.