2010-11-17 15:04:48

'Don't Cry for Me Sudan' என்ற திரைப்படம் மக்களைக் கவர்ந்து வருகிறது


நவ.17, 2010. 'சூடானே, எனக்காக அழாதே' என்று பொருள்படும் 'Don't Cry for Me Sudan' என்ற திரைப்படத்தைத் தென் கொரியாவில் 120,000 பேர் இதுவரைப் பார்த்திருக்கின்றனர்.
சூடானில் மறைபணியில் ஈடுபட்டு, இவ்வாண்டு ஜனவரியில் இறையடி சேர்ந்த 48 வயதான சலேசிய குரு John Lee Tae-suk என்பவரைக் குறித்த இத்திரைப்படம் அண்மையில் வெளியிடப்பட்டது. இது தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்து வருகிறது.
மருத்துவராய் இருந்த Lee, பின்னர் சலேசிய சபையில் சேர்ந்து, 2001ம் ஆண்டு குருவானார். சூடானில் பணி புரியச் சென்ற Lee, அங்கு பள்ளிகள், மருத்துவ மனைகள், இளையோர் இயக்கங்கள் பலவற்றை உருவாக்கி, மக்கள் மனதில் இடம் பிடித்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு தனது 48வது வயதில் இறந்தார்.'Don't Cry for Me Sudan' என்ற இத்திரைப்படம் வெகு விரைவில் Los Angeles நகரில் திரையிடப்படும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் Berlin திரைப்பட விழாவில் பங்கேற்கும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.