2010-11-16 15:42:27

ஹெய்ட்டி நாட்டில் அமெரிக்கா ஐக்கிய நாட்டு ஆயர்களின் நிவாரணப் பணிகள்


நவ 16, 2010. ஹெய்ட்டி நாட்டில் நிவாரணப்பணிகளின் வேகம் குறைவாக இருந்தாலும், அந்நாட்டிற்கானப் பணிகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் ஆதரவு மிகப் பலமாக இருப்பதாக தெரிவித்தார் அமெரிக்க ஆயர் கெவின் ஃபாரெல்.

இவ்வாண்டுத் துவக்கத்தில் ஹெய்ட்டியில் இடம்பெற்ற நில அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கப் பங்குத்தளங்கள் மூலம் 8கோடியே 26 இலட்சம் டாலர் திரட்டப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் ஆயர்.

ஹெயிட்டி நாட்டு மக்களுக்கென அமெரிக்க ஐக்கிய நாட்டின் 18 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பங்குத்தளங்களில் ஒரே வாரத்தில் திரட்டப்பட்ட தொகை முன் எப்போதும் திரட்டப்பட்டதைவிட அதிகம் என்றார் ஆயர் ஃபாரெல்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தங்கள் பிறரன்பு அமைப்பான CRS என்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பொதுமக்களுக்கென உறைவிடச் சாதனங்கள், மருத்துவ உதவிகள் போன்றவைகளை வழங்கும் பணியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.