2010-11-16 15:37:56

மதுபான போதைகளுக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்க கேரளாவில் ஜெபமாலை ஊர்வலம்.


நவ 16, 2010. மதுபானப் போதைகளுக்கு எதிராக மக்களில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் கேரளாவின் தமசேரி மறைமாவட்டத்தில் ஜெபமாலை ஊர்வலம் ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது.

கோழிக்கோடு மாவட்டத்தின் கோடன்சேரி என்ற பங்குத்தளத்தில் நடத்தப்பட்ட இந்த ஜெபமாலை ஊர்வலத்தில் கலந்து கொண்டோர், மதுபானப் பயன்பாட்டைக் கைவிடும்படி மக்களை விண்ணப்பிக்கும் அட்டைகளைத் தாங்கிச் சென்றனர்.

மதுபானப் பயன்பாடு கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களில் ஏற்படுத்துவதன் மூலமே மக்களைத் திருத்த முடியும் என்றார் தமசேரி ஆயர் ரெமிஜியூஸ் இஞ்சனனியில்.

கேரளாவின் கத்தோலிக்க வழக்குரைஞர் மனோஜ் கண்டத்திலின் கூற்றுப்படி, அம்மாநிலத்தில் மணமுறிவுகளுக்கு மதுபானப் பழக்கம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. பள்ளி மாணவர்களிடையேயும் இப்பழக்கம் அதிகமாகப் பரவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனிமனித மதுபான அருந்துதல் விகிதம் இந்தியாவில் கேரளாவில்தான் அதிகமாக உள்ளது.








All the contents on this site are copyrighted ©.