2010-11-15 15:31:05

பாகிஸ்தானில் கிறிஸ்தவக் கோவில்களுக்குப் பலத்தப் பாதுகாப்பு


நவ.15, 2010. பாகிஸ்தான் கராச்சியில் கடந்த வாரம் குற்றப் புலனாய்வுத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து, லாகூரில் உள்ள கிறிஸ்தவக் கோவில்கள் உட்பட பல முக்கிய இடங்களுக்குப் பலத்தப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

லாகூரில் உள்ள திரு இருதயப் பேராலயம், உயிர்ப்பின் பேராலயம் இரண்டிலும் இஞ்ஞாயிறுத் திருப்பலிகள் பலத்தப் பாதுகாப்புக்கிடையே நடத்தப்பட்டன. கோவிலைச் சுற்றி எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. கத்தோலிக்கர்கள் மட்டுமே கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் கூட்டம் நிரம்பியுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், தற்கொலைப் படைத் தாக்குதல்களின் போது, எப்படி தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஞாயிறு மறையுரையின் போது லாகூர் குருகுல முதல்வர் ஆண்ட்ரு நிசாரி எடுத்துரைத்தார்.

நாட்டில் நிலவும் வன்முறைகள் இறுதி நாட்கள் குறித்து இஞ்ஞாயிறு சொல்லப்பட்டுள்ள விவிலிய வாசகத்தை ஒத்திருக்கிறதென்று அருள்தந்தை நிசாரி மேலும் கூறினார்.

தொடர்ந்து நடைபெறும் இந்த வன்முறைகளால் மக்கள் பொறுமை இழந்துள்ளனர் என்றும், இருந்தாலும் கோவில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறதென்றும் திரு இருதய பேராலயத்தின் மறைகல்வி போதகர் Emanuel Shaad கூறினார்.








All the contents on this site are copyrighted ©.