2010-11-15 14:45:41

நவம்பர் 15 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1505 - போர்த்துக்கீசிய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லாரன்ஸ் டி அல்மெய்தா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1889 - பிரேசில் குடியரசாகியது.

1943 - நாசி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

1949 - நாதுராம் விநாயக கோட்சே மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.

1988 - பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.

2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.