2010-11-13 14:02:55

நேபாளத்திற்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் பென்னாக்கியோ


நவ.13, 2010: நேபாளத்திற்கானத் திருப்பீடத் தூதராக, இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோவை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பேராயர் பென்னாக்கியோவை, இவ்வாண்டு மே 8ம் தேதி இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதராக நியமனம் செய்த திருத்தந்தை, இச்சனிக்கிழமை அவரை நேபாளத்திற்கானத் திருப்பீடத் தூதராகவும் நியமித்துள்ளார். 1952ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி இத்தாலியின் நேப்பிள்ஸ்க்கு அருகிலுள்ள மரானோவில் பிறந்த பேராயர் பென்னாக்கியோ மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றவர். 1975ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி திருப்பீடத் தூதரகப் பணியில் சேர்ந்த இவர், பானமா, எத்தியோப்பியா, ஆஸ்திரேலியா, துருக்கி, எகிப்து, யூக்கோஸ்லாவியா, அயர்லாந்து ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றியிருக்கிறார்.

1998ல் ருவாண்டாவுக்குத் திருப்பீடத் தூதராக நியமனம் செய்யப்பட்ட இவர், 2003ல் தாய்லாந்து, சிங்கப்பூர், கம்போடியா ஆகிய நாடுகளுக்கானத் திருப்பீடத் தூதராகவும், மியான்மார், லாவோஸ், மலேசியா, புருனெய் ஆகிய நாடுகளுக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும் நியமனம் செய்யப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.