2010-11-12 15:06:57

பாகிஸ்தான் கத்தோலிக்கப் பெண்ணுக்கு எதிரான மரண தண்டனைக்கு இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் கண்டனம்


நவ.12,2010. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் ஒரு கத்தோலிக்கப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இன்றைய உலகில் இத்தகைய நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றுரைத்த இந்திய ஆயர் பேரவைப் பேச்சாளர் அருட்திரு பாபு ஜோசப், இத்தகைய கடும் தண்டனைகளுக்கு வழி அமைக்கும் பழையச் சட்டங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமானச் சட்டங்கள் சமுதாயங்களிலிருந்து ஒழிக்கப்படுவதற்கு நாம் முயற்சிகள் எடுக்க வேண்டுமெனவும் அருட்திரு பாபு ஜோசப் கேட்டுக் கொண்டார்.

45 வயதாகும் Asia Bibi என்ற பெண், இறைவாக்கினர் முகமது பற்றித் தரக்குறைவாகப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு இம்மாதம் 7ம் தேதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.