2010-11-12 15:10:40

நவம்பர் 14 – உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு தினம்


நவ.12,2010. பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய, சோர்வை ஏற்படுத்தக்கூடிய மற்றும் பணக்கார வியாதியான நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசுகளும் அரசு நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

நவம்பர் 14ம் தேதி கடைபிடிக்கப்படும் உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு நாளுக்கெனச் செய்தி வெளியிட்டுள்ள மூன், இந்நோயால் துன்புறுவோர் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, 2005க்கும் 2030க்கும் இடைப்பட்ட காலத்தில் நீரழிவு நோயால் ஏற்படும் இறப்புகள் இரு மடங்காகக்கூடும் என்று தெரிகிறது.

தற்சமயம் உலகில் 22 கோடிக்கு மேற்பட்டோர் இந்நோயால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏழை நாடுகள் அதிகம் பாதிக்கப்படும்வேளை, இந்நோயாளிகளில் 80 விழுக்காட்டினர் வளர்ச்சி குன்றிய மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.