2010-11-12 15:08:01

ஊழலும் தவறான நிர்வாகமுமே ஆப்ரிக்கர்களின் வறுமைக்குக் காரணம் – ஆப்ரிக்க ஆயர்


நவ.12,2010. ஆப்ரிக்கக் கண்டம் இயற்கை வளங்களால் மிகுந்திருந்தாலும் அக்கண்டத்தில் பரவலாக வறுமை தொடர்ந்து இருப்பதற்கானக் கேள்வியை எழுப்பினார் புர்க்கினா ஃபாசோ (Burkina Faso) பேராயர் Anselme Sanon.

கென்ய நாட்டின் நைரோபியில் 200க்கு மேற்பட்ட இறையியல் அறிஞர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர், சில ஆப்ரிக்க நாடுகள் தங்கம், உரேனியம், வைரம் போன்ற வளங்களால் நிறைந்திருந்தாலும், அக்கண்டத்தில் நிலவும் ஊழலும் தவறான நிர்வாகமுமே மக்கள் இன்னும் வறுமையால் வாடுவதற்கானக் காரணங்கள் என்று கூறியுள்ளார்.

ஆப்ரிக்காவின் 50 வருடச் சுதந்திரம் அதன் வளர்ச்சிக்குப் போதவில்லையாதலால் அது அடுத்த 50 ஆண்டுகளில் கடுமையாய் உழைக்க வேண்டியுள்ளது என்றார் பேராயர் சனோன்.







All the contents on this site are copyrighted ©.