2010-11-12 15:08:57

ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோய் பொதுநலவாழ்வுப் பிரச்சனை என்பதைவிட அது ஆழமான ஆன்மீகப் பிரச்சனையாக இருக்கின்றது


நவ.12,2010. ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோய் பொதுநலவாழ்வுப் பிரச்சனை என்பதைவிட அது ஆழமான ஆன்மீகக் காயமாக இருக்கின்றது, எனவே ஆன்மீக வாழ்வில் ஆறுதல் அளிப்பதன் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும் என்று கென்ய ஆயர் Anthony Muheria கூறினார்.

கென்ய மக்களில் குறைந்தது பாதிப்பேர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்குத் திருச்சபை விசுவாசத்தின் அடிப்படையிலான உதவிகளைச் செய்கின்றது என்றார் ஆயர்.

எய்ட்ஸ் நோய்க் காரணமாகத் தனது மறைமாவட்டத்தில் அனாதைகளாக இருக்கும் முப்பதாயிரம் சிறாரைத் திருச்சபை நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன எனன்றும் அவர் கூறினார்

கென்யாவில் இருபது பேருக்கு ஒருவர் வீதம் எய்ட்ஸ் அல்லது HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.