2010-11-11 15:31:22

குளிர் காலத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு முழு வீச்சில் பணி


நவ.11, 2010. பாகிஸ்தான் வெள்ளத்தில் வீடுகளை இழந்தோரில் பலர் இன்னும் கூடாரங்களில் தங்கியுள்ளச் சூழலில், இப்போது ஆரம்பமாகியுள்ள குளிர் காலத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு முழு வீச்சில் பணி புரிந்து வருகிறது.
கைபர் கணவாய் அருகே ஏற்கனவே பனிப் பொழிவு ஆரம்பமாகிவிட்டதால், அப்பகுதி மக்கள் குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளத் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் கடந்த மூன்று மாதங்களாகக் கூடாரங்களில் மின்சார வசதிகள் ஏதுமின்றி இருக்கின்றனர் என்றும், இக்குளிர் காலத்தில் இவர்கள் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாகிஸ்தானில் பேரழிவை உருவாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டி முடிக்க இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்றும், அதுவரை அவர்களை இயற்கையின் சீற்றங்களிலிருந்து காப்பது நமது கடமை என்றும் பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனரான Faisalabad ஆயர் Joseph Coutts கூறினார்.







All the contents on this site are copyrighted ©.