கிறிஸ்தவ ஒருமைப்பாட்டிற்கானத் திருப்பீட அவை ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
நவ.10, 2010. கிறிஸ்தவ ஒருமைப்பாட்டிற்கானத் திருப்பீட அவை இம்மாதம் 17ம் தேதி தனது ஐம்பதாம்
ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கின்றது. இந்த நிறைவு கொண்டாட்டத்தில் இத்திருப்பீட அவையின்
தலைவர் பேராயர் Kurt Koch தலைமை தாங்குவார். மேலும் இவ்வவையின் முன்னாள் தலைவர் கர்தினால்
Walter Kasper, Canterbury பேராயர் Rowan Williams, Constantinople கிறிஸ்தவ ஒருமைப்பாடு
குலமுதல்வர் Pergamo Ioannis ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர்
15 முதல் 19 வரை "ஒரு புதிய நிலையை நோக்கி கிறிஸ்தவ ஒருமைப்பாட்டுக்கான உரையாடல்" என்ற
தலைப்பில் இத்திருப்பீட அவையின் கூட்டம் நடைபெறும் என்றும், அக்கூட்டத்தின் போது, இந்தக்
கொண்டாட்டமும் நடத்தப்படும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.1960ம் ஆண்டு ஜூன்
5ம் தேதி திருத்தந்தை 23ம் ஜான் ஆரம்பித்த இந்த முயற்சி, 1988ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம்
ஜான் பாலால் ஒரு திருப்பீட அவையாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.