2010-11-09 15:45:44

மத்தியக் கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களின் இருப்பை மேலும் பலப்படுத்த வேண்டுமெனில், அப்பகுதிக்கான திருப்பயணங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்


நவ 09, 2010. பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் மத்தியக்கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களின் இருப்பை மேலும் பலப்படுத்த வேண்டுமெனில், அப்பகுதிக்கானத் திருப்பயணங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் ஜெர்மன் ஆயர் Gregor Maria Hanke.

கடந்த மாதத்தின் மத்தியக்கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவைக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயர், மத்தியக்கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்பை உறுதி செய்வதற்கான வழிகளுள், அப்பகுதிக்கான திருப்பயணங்களை ஊக்குவிப்பதும் ஒன்று என்றார். திருப்பயணங்கள் மூலம் ஆன்மீக உணர்வுகளுக்கு மீண்டும் உயிரூட்டம் வழங்கவேண்டும் என திருத்தந்தை 16ம் பெனடிக்டும் கருத்துக் கொண்டுள்ளதாகவும் கூறினார் ஆயர் Hanke.

இயேசுவோடும் ஆதிகால திருச்சபையோடும் தொடர்புடைய மத்தியக்கிழக்குப் பகுதிகளில் திருப்பயணம் மேற்கொள்வதன் வழி திருப்பயணிகள் ஆன்மீகக் கொடைகளைப் பெறுவதோடு, அப்பகுதி கிறிஸ்தவர்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டையும் அறிவிக்க முடியும் என்றார் ஜெர்மன் ஆயர்.

மத்தியக்கிழக்குப் பகுதியின் வளர்ச்சித்திட்டங்களுக்கு, குறிப்பாக கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு கிறிஸ்தவத் திருப்பயணிகள் உதவ முடியும் என மேலும் கூறினார் ஆயர் Hanke.








All the contents on this site are copyrighted ©.