2010-11-09 15:50:25

சீனாவின் மனித உரிமை நிலைகள் ஜி.20 மாநாட்டில் விவாதிக்கப்பட கிறிஸ்தவ அமைப்பின் விண்ணப்பம்.


நவ 09, 2010. இவ்வாரம் வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் Seoul ல் இடம்பெறும் ஜி.20 கூட்டத்தில் சீன அரசுத்தலைவரைச் சந்திக்கும்போது சீனாவின் மனித உரிமை நிலைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமருக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது உலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு.

இங்கிலாந்தின் 14 பாராளுமன்ற அங்கத்தினர்களின் கையெழுத்துடன் இவ்விணப்பத்தைத் தயாரித்துளள்ள இக்கிறிஸ்தவ அமைப்பு, ஜி.20 கூட்டத்தின்போது சீனாவின் மனித உரிமை நிலைகள் விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சீனாவில் அரசியல் அமைப்பு முறையில் சீர்திருத்தங்கள் கொணரப்பட வேண்டும் என அழைப்பு விடுத்ததால் சிறையில் இருப்பவரும், இவ்வாண்டின் நொபெல் அமைதி விருது பெற்றவருமான Liu Xiaobo, மற்றும் மனித உரிமை வழக்குரைஞர் Gao Zhisheng ஆகியோரின் விடுதலைக்காக சீன அரசுத்தலைவர் Hu Jintao விடம் பிரிட்டானியப் பிரதமர் David Cameron வலியுறுத்த வேண்டும் என விண்ணப்பித்துள்ளது உலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு.








All the contents on this site are copyrighted ©.