2010-11-08 15:32:39

வடகொரியாவுக்கு பெரிய அளவில் அரிசியை கொடையாக வழங்குவது, இரு கொரிய நாடுகளிடையே பதட்டத்தைக் களைய உதவக்கூடும்.


நவ 08, 2010. இரு கொரிய நாடுகளிடையே ஐக்கியத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் வடகொரிய மக்களின் மனங்களைக் கவர பெரிய அளவில் அந்நாட்டு மக்களுக்கு அரிசியை கொடையாக வழங்குவது உதவக்கூடும் என கொரிய பொதுநிலைக் கத்தோலிக்கக் கருத்தரங்கில் உரைக்கப்பட்டது.

'தேசிய ஒப்புரவிற்கான வழிகளை ஆராய்தல்' என்ற தலைப்பில் Seoulன் கத்தோலிக்க மையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் யாங் முன்சு, உணவு உதவிகள் மூலம் வடகொரிய மக்களின் மனங்களைச் சென்றடைய முடியும் என்றார்.

கடந்த கால தென்கொரிய அரசுகள் அரிசியைப் பெருமளவில் கொடையாக வழங்கியுள்ளதன் மூலம் வடகொரியாவின் விரோத மனப்பான்மையைக் குறைக்க உதவியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார் அப்பேராசிரியர்.

ஒன்பது இலட்சம் டன் அரிசிப் பற்றாக்குறையை இவ்வாண்டில் எதிர்நோக்கும் வடகொரியாவிற்கு, 5000 டன் அரிசியையே கடந்த செப்டம்பரில் தென்கொரியா அனுப்பியுள்ளது மிக மிகச் சிறிய அளவே எனவும் கூறினார் பேராசிரியர் யாங் முன்சு.








All the contents on this site are copyrighted ©.