2010-11-08 15:22:35

நவம்பர் 09 நாளும் ஒரு நல்லெண்ணம்


“நிறத்தின் அடிப்படையில் சக மனிதரை அழிக்க உதவும் அர்த்தமற்ற, முட்டாள்தனமான மற்றும் தவறான தொடர் எண்ணங்களையும் கருத்துக்களையும் ஒழிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள். அனைத்துலகுக்கும் ஒரே தந்தையாகிய கடவுள் நம் அனைவரையும் ஒரே மாதிரியான சதைப்பிடிப்போடு படைக்கவில்லை. ஆனால் அக்கடவுள் பாரபட்சமின்றி எல்லாருக்கும் ஒரே மாதிரியான திறமைகளையும் உணர்வுகளையும் கொடுத்திருக்கிறார்”.

இவ்வாறு சொன்னவர் கணிதவியல் மற்றும் வானயியல் நிபுணரான Benjamin Banneker. இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டு Maryland ல் 1731ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பிறந்தார். அறிவியலில் பட்டம் பெற்ற முதல் ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்களில் இவரும் ஒருவர். 1752ம் ஆண்டில் முழுவதும் மரத்தாலான கடிகாரத்தை உருவாக்கிப் பொது மக்களின் பாராட்டைச் சம்பாதித்தவர். அமெரிக்காவில் முதலில் உருவாக்கப்பட்ட கடிகாரம் என நம்பப்படும் இது பல பத்தாண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டது. இவர் 1789ம் ஆண்டின் சூரிய கிரணத்தை சரியாகக் கணக்கிட்டு முன்னறிவித்தார். ஆப்ரிக்க அமெரிக்கர்கள் அறிவியலில் முன்னேற இவர் எடுத்துக்காட்டாய் இருந்தார்.

யாரோ சொன்னது - “நீதி என்னிடம் வளைந்திருக்க அதை நான் பிறரிடம் நிமிர்த்த முடியாது”








All the contents on this site are copyrighted ©.