2010-11-08 15:34:16

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் திருத்தந்தைக்கு 5ம் இடம்


நவ 08, 2010. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 5ம் இடத்தை வகிப்பதாக Forbes என்ற இதழ் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரக்கணக்கு ஒன்று கூறுகின்றது.

உலகிலுள்ள மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் என 68 பேர் இவ்விதழால் இனம் காணப்பட்டதில் மதத்தலைவர்களின் வரிசையில் திருத்தந்தை 16ம் பெனடிக்டே முதல் இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசுத்தலைவர் Hu Jintao, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் Barack Obama, சவுதி மன்னர் Abdullah ரஷ்யாவின் Vladimir Putin ஆகியோர்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

100 கோடிக்கும் மேற்பட்ட அங்கத்தினர்களைக் கொண்ட உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை வழி நடத்திச்செல்லும் இவ்வுலகத்தலைவர் திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.