2010-11-04 15:46:20

ஈராக் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால், அந்நாடு இன்னும் சீர்குலைந்து போகும் - இஸ்லாமியப் பத்திரிக்கையின் ஆசிரியர்


நவ.04,2010. இதற்கிடையே, ஈராக் அரசு கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கத் தவறி வருவதால், கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகி வருகிறது என்றும், அப்படி அவர்கள் வெளியேறினால், அந்நாடு இன்னும் சீர்குலைந்து போகும் என்றும் Al Sharq Al Awsat என்ற இஸ்லாமியப் பத்திரிக்கையின் ஆசிரியர் Tariq Alhomayed தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
அரசிடம் பல ஆண்டுகளாகத் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி வேண்டிவந்த கிறிஸ்தவர்கள், கடந்த சில ஆண்டுகளாகத் தங்களைக் காத்துக்கொள்ள தலத்திருச்சபையின் உதவிகளை நாடினர் என்று Tariq தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.ஈராக்கில் உள்ள சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால், தங்கள் நாடு இஸ்லாமிய ஆதிக்கத்திற்கு முற்றிலும் உட்பட்டுவிடும் என்றும், அந்த நிலையில் இன்னும் அதிகமான பிரச்சனைகளை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இஸ்லாமியப் பத்திரிக்கையாளர் Tariq Alhomayed தன் கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.