2010-11-04 15:45:00

இஸ்ரேல், பாலஸ்தீன் நாடுகளுக்கிடையே நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் - பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட்


நவ.04,2010. இஸ்ரேல், பாலஸ்தீன் நாடுகளுக்கிடையே நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பது மத்தியக் கிழக்குப் பகுதி அனைத்திலும் அமைதிக்கு வழி வகுக்கும் என்று ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் நியூ யார்க் நகரில் இச்செவ்வாயன்று பேசுகையில் கூறினார்.
பாலஸ்தீனிய அகதிகளுக்குத் திருபீடத்தின் சிறப்புப் பணிக்குழு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிகள் செய்து வந்ததை நினைவு கூர்ந்த பேராயர் சுல்லிக்காட், அரசுகள் மேற்கொள்ள வேண்டிய இக்கடமைகளைத் தனிப்பட்டவர்களும் பிறரன்பு நிறுவனங்களும் அதிக அளவில் செய்து வருகின்றன என்று கூறினார்.இஸ்ரேல், பாலஸ்தீன் நாடுகளுக்கிடையே நிரந்தரத் தீர்வைக் கொண்டு வருவதற்கும், புனித நகர் எருசலேமை உலகில் உள்ள அனைத்துத் திருப்பயணிகளும் அச்சமின்றி அணுகி வர தேவையானச் சூழலை உருவாக்குவதற்கும் உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற சிறப்பான வேண்டுகோளைப் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் முன் வைத்தார்.







All the contents on this site are copyrighted ©.