2010-11-02 15:38:43

வாழ்வுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கே வாக்களிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு பேராயர் விடுத்த அழைப்பிற்கு யூதமதக் குருக்களின் ஆதரவு.


நவ 02, 2010. வாழ்வுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கே வாக்களிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு பேராயர் ஒருவர் விடுத்த அழைப்பிற்கு அந்நாட்டு யூதமதக் குருக்களின் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூத குருக்களைக் கொண்ட இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித வாழ்வுக்கான மதிப்பு என்பது இன்றியமையாத ஒன்று என்பதை மனதில் கொண்டு வேட்பாளர்கள் வாக்களிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.

வாழ்வதற்கான உரிமையை மறுப்பவர்களுக்கு நாம் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

வாழ்வுக்கு எதிரான நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்து வரும் பேராயர் Raymond Burke யின் கருத்துக்களுக்கும் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர் யூத மத குருக்கள்.

பேராயர் Raymond Burke அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.