2010-11-01 15:29:46

நவம்பர் 02 நாளும் ஒரு நல்லெண்ணம்


வாழ்க்கையின் பொருள்தேடி அலைந்து கொண்டிருந்த பயணி ஒருவர், ஒரு குகையில் வாழ்ந்து வந்த சுவாமிஜியிடம், “குருவே, உங்களது தூய்மை வாழ்வின் இரகசியம்” என்ன என்று கேட்டார். குரு அவரிடம், “உனது கிணறு எவ்வளவு ஆழமானது?” என்று பதிலுக்குக் கேட்டார். அந்தப் பயணிக்கு ஒன்றும் புரியவில்லை. “குருவே நான் நகரத்திலிருந்து வருகிறேன். அங்கு கிணறுகள் கிடையாது. குழாய்கள் வழியாக எனது வீட்டிற்குத் தண்ணீர் வருகிறது” என்றார். அதற்கு அந்தச் சுவாமிஜி, “அதுவல்ல பிரச்சனை. வீட்டிற்குப் போய் உனக்கென ஒன்றைத் தோண்டு. அதிலிருந்து உனது ஆன்மாவுக்குத் தேவையான எல்லாத் தண்ணீரையும் நீ பெறுமளவுக்கு அது ஆழமானதாக இருக்க வேண்டும்” என்றார்.

புனிதம் என்பது வெளிப்புறச் செயல்களிலும் அர்த்தமற்ற சடங்குகளிலும் அல்ல, மாறாக ஒருவர் தன்னிலே உள்ளூர ஆழமாய்ச் செல்வதில் அடங்கியுள்ளது. சுவாமி சின்மயானந்தா சொன்னார் – “உங்களுக்குள்ளே ஆழமாக, மிக ஆழமாகச் செல்லுங்கள். சுடர்விடும் ஒளியை, மனச்சாட்சியின் இருக்கையை உங்களுக்குள்ளே தேடுங்கள்” என்று.








All the contents on this site are copyrighted ©.