2010-11-01 15:25:45

எருசலேமில் சிறப்பிக்கப்பட்ட கத்தோலிக்கப் பெண்களின் சர்வதேச ஐக்கிய அவையின் நூறாமாண்டுக் கொண்டாட்டம்


நவம்பர் 1, 2010 - உலக முழுவதும் உள்ள கத்தோலிக்கப் பெண் அமைப்புகளின் சர்வதேச ஐக்கிய அவையின் நூறாமாண்டுக் கொண்டாட்டம் அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளுடன் எருசலேமில் சிறப்பிக்கப்பட்டது.

திருச்சபையிலும் சமூகத்திலும் பெண்களின் பிரசன்னம், பங்கேற்பு மற்றும் பொறுப்புணர்வை ஒன்றிணைப்பதற்கென 1910ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் 50 இலட்சம் அங்கத்தினர்களின் 500 பிரதிநிதிகள் எருசலேமில் ஒன்று கூடி திருமணம் மற்றும் குடும்பம் குறித்து விவாதித்ததுடன், அப்பகுதி கிறிஸ்தவக் குடும்பங்களையும் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்த உள்ளனர்.

60 நாடுகளைச் சேர்ந்த 500 பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்ட 5 நாள் கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை எருசலேமின் லத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Fouad Twal நிறைவேற்றி உரை வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.