2010-10-30 16:27:50

மனிதர்களை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு எதிரானச் சட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என தலத் திருச்சபை கோரிக்கை.


அக்.30, 2010. மனிதர்களை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு எதிரானச் சட்டம் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடிபெயர்வோர்க்கான அவையின் தலைவர் ஆயர் John Wester உரைக்கையில், மக்களைக் கடத்தி வியாபாரம் செய்வோருக்கான சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அது தீவிரமாக அமுல்படுத்தப்படவேண்டிய அவசரம் உள்ளது என்றார்.

ஏற்கனவே இச்சட்டத்தினால் விளைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நன்மைகள் குறித்து அமெரிக்க ஐக்கிய நாடு பெருமைப்படும் அதேவேளை, வருங்காலத்தில் இச்சட்டம் மேலும் சிறந்த பலனைத் தரும் வகையில் பலம் பொருந்தியதாக அமைக்கப்பட வேண்டும் என்றார் ஆயர் வெஸ்டர்.








All the contents on this site are copyrighted ©.