2010-10-30 16:29:06

சீனாவில் அரசியல் எதிர்ப்பாளர்கள் மனநோய் மருத்துவமனைகளில் கட்டாயமாக வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறது மனித உரிமைகள் கழகம்.


அக்.30, 2010. சீனாவில் அரசியல் எதிர்ப்பாளர்கள் மனநோய் மருத்துவமனைகளில் கட்டாயமாக வைக்கப்படுவதாக Human Rights Watch என்ற மனித உரிமைகள் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சீனாவில் கம்யூனிச ஆட்சி பொறுப்பேற்றதலிருந்தே இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அரசியல் எதிர்ப்பாளர்கள் பல ஆண்டுகளாக மனநல மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு, காலில் விலங்கிடப்பட்டு மின்சார அதிர்ச்சி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கிறது இம்மனித உரிமைகள் கழகம்.








All the contents on this site are copyrighted ©.