2010-10-28 15:40:45

இந்தோனேசியாவில் மக்களைக் காக்க காரித்தாஸ் அமைப்பு இரவும் பகலும் உழைப்பு


அக். 28, 2010 - இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்க அந்நாட்டின் காரித்தாஸ் அமைப்பு இரவும் பகலும் உழைத்து வருகிறது.
இம்மாதத் துவக்கத்தில் மேற்கு Papua பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 145 பேர் உயிரிழந்தனர், மற்றும் பல வீடுகள் சேதமடைந்தன. இத்திங்களன்று ஜகார்தாவுக்கருகே ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவு ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த சுனாமி ஆகியவைகளால் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மற்றும் 500க்கும் அதிகமானோர் கதி என்னவென்று அறியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், இச்செவ்வாயன்று Merapi எரி மலை வெடித்ததால் மேலும் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
அடுக்கடுக்காய்த் தொடர்ந்து வந்த இந்த துயர சம்பவங்களால் மக்கள் பெரிதும் நிலைகுலைந்து போயிருப்பதாக இந்தோனேசிய காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Sigit Pramuji கூறினார்.இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் காரித்தாஸ் நிறுவனங்களும் அளித்துள்ள உறுதியாலும், தங்களிடம் உள்ள நிதி நிலையாலும் இம்மக்களுக்கு தேவையான உதவிகள் உடனடியாகச் செய்யப்பட்டு வருகின்றன என்று அருள்தந்தை Pramuji கூறினார்.







All the contents on this site are copyrighted ©.