2010-10-28 15:31:44

அக்டோபர் 29 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
1886 - அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கையெழுத்தானது.
1961 - ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.
1964 - தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து டான்சானியா என்ற குடியரசானது.
1964 - 565 காரட் (113 கிராம்) "ஸ்டார் ஆஃப் இந்தியா" உட்படப் பல மதிப்புமிக்க வைரங்கள் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.
1967 – கானடாவின் மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.
1999 - ஒரிஸாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 25 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். 2005 - டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60 பேர் வரை கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.