2010-10-27 16:33:24

சிலே நாட்டுச் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்கு 80,000க்கும் மேற்பட்ட இளையோர் இறைவனுக்கு நன்றி


அக்.27, 2010 - அண்மையில் சிலே நாட்டுச் சுரங்கத்தில் புதையுண்ட 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்கு அந்நாட்டின் 80,000 க்கும் மேற்பட்ட இளையோர் இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.
69 நாட்களாக சிலே நாட்டின் சந்தியாகோ என்ற பகுதியில் தாமிர மற்றும் தங்கச் சுரங்கம் ஒன்றில் சிக்கிக் கொண்ட 33 தொழிலாளர்கள் இம்மாதம் 13ம் தேதி மீட்கப்பட்டதை ஒர் அற்புத நிகழ்வு என்று கூறி, கடந்த சனிக்கிழமை Andesன் புனித தெரேசா திருத்தலத்தில் 80,000க்கும் மேற்பட்ட இளையோர் இறைவனுக்கு நன்றி கூறினர்.
ஒவ்வோர் ஆண்டும் இத்திருத்தலத்திற்கு இளையோரால் மேற்கொள்ளப்படும் திருப்பயணம் இவ்வாண்டு இச்சுரங்க மீட்புச் சம்பவத்தால் அதிகச் சிறப்பு பெற்றது. இந்த நன்றித் திருப்பலியை சந்தியாகோ உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் பிரான்சிஸ்கோ ஹாவியேர் Errazuiz நிறைவேற்றினார்.சிலே நாட்டின் முதல் புனிதரான Andesன் புனித தெரேசாவைப் போல் இளையோரும் கிறிஸ்துவுடன் ஆழமான நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று கர்தினால் Errazuiz அழைப்பு விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.