2010-10-27 16:32:38

இலங்கையின் முதல் கர்தினாலான தாமஸ் கூரேயைப் புனிதராக்கும் முயற்சிகள் ஆரம்பம்


அக்.27, 2010 - இலங்கையின் முதல் கர்தினாலாக உயர்த்தப்பட்ட தாமஸ் கூரேயைப் புனிதராக்கும் முயற்சிகள் ஆரம்பமாக உள்ளன.
அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்புப் பேராயர் மால்கம் ரஞ்சித் தலைமையில் இவ்வெள்ளியன்று Tewatta என்ற இடத்தில் உள்ள இலங்கை மரியன்னை பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியில் இம்முயற்சிகள் ஆரம்பமாகும் என்று கொழும்பு உயர்மறைமாவட்டச் செய்திகள் கூறுகின்றன.
1901ம் ஆண்டு Negombo என்ற இடத்தில் பிறந்த தாமஸ் கூரே, 1965ம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் இலங்கையின் முதல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர் 1988ம் ஆண்டு தன் 87வது வயதில் இறையடி சேர்ந்தார்.மதச்சுதந்திரத்தைப் பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட இலங்கை அரசின் போக்கினைக் கண்டித்து, கத்தோலிக்கத் திருச்சபைக்கு உறுதியுடன் பணி செய்த கர்தினால் கூரேயின் புனித வாழ்வைக் கொழும்பு உயர்மறைமாவட்டச் செய்தி பல வழிகளிலும் விளக்கியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.