2010-10-25 16:26:42

பிலிப்பின்ஸ் நாட்டில் கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே நடுநிலையாகச் செயல்பட தலத் திருச்சபை தயார்


அக்.25, 2010 - பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாகப் போராடி வரும் கம்யூனிசப் புரட்சியாளர்கள், தற்போது அரசுடன் ஆன அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், இருதரப்பினருக்குமிடையே நடுநிலையாகச் செயல்படத் தயாராக இருப்பதாகத் தலத் திருச்சபை அறிவித்துள்ளது.

உண்மையான அமைதி முயற்சிகளுக்குத் திருச்சபையின் ஆதரவு என்றும் உண்டு என அறிவித்த பிலிப்பின்ஸ் ஆயர் Emmanuel Trance, இரு தரப்பினரும் அமைதிப் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய நல் மனதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

கம்யூனிசப் புரட்சியாளர்களுடன் அமைதிப் பேச்சு வார்த்தைகளைத் துவக்க பிலிப்பின்சின் புதிய அரசு ஆர்வம் காட்டி வருவதை வரவேற்றுள்ள அந்நாட்டு ஆயர்கள், இருதரப்பினருக்குமிடையேயான அமைதிப் பேச்சு வார்த்தைகள் மக்கள் நலனை மனதிற் கொண்டதாய் இடம் பெற வேண்டும் என்றனர்.

அரசுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகள் மூலம், நாட்டின் இயற்கை ஆதாரங்கள் முன்னேற்றப்படுவதற்கும், வளங்கள் மக்களிடையே சரி சமமாகப் பங்கிடப்படுவதற்கும் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் பிலிப்பின்சின் Kalookan ஆயர் Deogracias Iniquez.








All the contents on this site are copyrighted ©.