2010-10-25 16:21:54

2012ல் அடுத்த உலக ஆயர் மாமன்றம்


அக்.25, 2010 - மேலும், அடுத்த உலக ஆயர் மாமன்றம் 2012ல் கூடும் என்றும் அதற்கான தலைப்பாக 'கிறிஸ்தவ விசுவாசத்தைப் பிறருக்கு வழங்குவதற்கான புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி' என்பது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருச்சபை சமூகத்தைக் கட்டியெழுப்புவது என்பது மறைப்பணிக்கான திறவுகோல் என்ற பாப்பிறை, திருச்சபை என்பது நற்செய்தி அறிவிக்கவும், அதாவது போதிக்கவும் கற்பிக்கவும், அருட்கொடைகளின் வழியாக இருக்கவும், பாவிகளை இறைவனோடு ஒப்புரவாக்கவும், இயேசுவின் பலியின் நினைவாக திருப்பலி நிறைவேற்றவும் இவ்வுலகில் உள்ளது என்ற திருந்தந்தை 6ம் பவுலின் வார்த்தைகளையும் எடுத்தியம்பினார். நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது உலகில் புரட்சியைக் கொணர்வதற்கல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவிடமிருந்து சக்தியைப் பெற்று இவ்வுலகில் மாற்றத்தைக்கொணர்வதற்கே என தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது மேலும் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.