2010-10-23 15:58:59

கியூப மனித உரிமை் ஆர்வலருக்கு சக்கரோவ் விருது


அக்.23,2010. கியூப நாட்டு மனித உரிமைகள் ஆர்வலர் Guillermo Farinas க்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பேச்சு சுதந்திரத்திற்கான சக்கரோவ் விருது வழங்கப்பட்டுள்ளது.

48 வயதாகும் ஃபரினாஸ் கடந்த 11 ஆண்டுகளாக மனச்சான்றின் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர். உளவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவரும் பத்தரிகையாளருமான இவர் கியூபாவில் மனித உரிமை மீறல்களை எதிர்த்து 23 தடவைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருப்பவர்.

இவரது சக ஆர்வலர் ஒர்லாந்தோ சாப்பாட்டா இறந்ததையடுத்து இவ்வாண்டு பிப்ரவரியில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஃபரினாஸ். ஆயினும் 52 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து 135 நாட்கள் கழித்து இப்போராட்டத்தைக் கட்டாயமாகக் கைவிட்டார்.

இந்த 52 அரசியல் கைதிகளின் விடுதலைக்குக் கியூபக் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கு குறிப்பிடும்படியானது.








All the contents on this site are copyrighted ©.