2010-10-23 15:54:27

ஈரானில் முஸ்லீம்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றச் சுதந்திரம் அளிக்கப்படுகிறார்கள்-ஈரானிய இசுலாம் தலைவர்


அக்.23,2010. ஈரானில் இசுலாமை விட்டு விலகுவோருக்கு மரணதண்டனை என்ற கடுமையான இசுலாமிய சட்டம் இருக்கின்ற போதிலும், அந்நாட்டிலுள்ள முஸ்லீம்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைத் தழுவுவதற்குச் சுதந்திரம் அளிக்கப்படுகிறார்கள் என்று ஷியைட் இசுலாமியத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான முதல் சிறப்பு ஆயர் மாமன்றத்தில் கலந்து கொண்ட ஈரானின் Ayatollah Seyed Mostafa Mohaghegh Ahmadabadi, கத்தோலிக்க இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

ஈரானில் மதமாற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த Ahmadabadi, யாரும் யாரையும் உனது மதம் என்ன என்று கேட்கக் கூடாது, இது தடை செய்யப்பட்டுள்ளது, எனினும், இசுலாம் உட்பட எந்த மதத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிவித்தார்.

இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் புனித பேதுரு பிசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை நிகழ்த்தும் கூட்டுத் திருப்பலியுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்த முதல் சிறப்பு ஆயர் மாமன்றம் நிறைவுக்கு வரும்







All the contents on this site are copyrighted ©.