2010-10-23 16:03:35

அக்டோபர் 24, நாளும் ஒரு நல்லெண்ணம்


350.org என்ற அமைப்பு நமது சுற்றுச்சூழலில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவைக் குறைக்கப் போராடி வருகிறது. விண்வெளியில் உள்ள பத்து இலட்சம் பல்வேறு துகள்களுக்கு 350 என்ற அளவுக்கும் குறைவாக கார்பன்-டை-ஆக்ஸைடு துகள்கள் இருந்தால் மட்டுமே நமது சுற்றுச் சூழல் பாதுகாப்பாக இருக்கும். 350க்கு மேல் இருந்தால் Ozone படலத்தில் உருவாகும் ஓட்டை உட்பட, பலவித ஆபத்துக்கள் ஏற்படும். உலகம் தொழில்மயமாவதற்கு முன் 278 துகள்கள் என்ற அளவில் இருந்த கார்பன்-டை-ஆக்ஸைடு, இன்றைய உலகில் 392 என்ற ஆபத்தான அளவு உயர்ந்துள்ளது.
அளவுக்கு மீறி பெருகியுள்ள வாகனங்கள் உட்பட பல்வேறு இயந்திரங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளின் விளைவாகச் சுற்றுச்சூழலில் கார்பன்-டை-ஆக்ஸைடு ஆபத்தான அளவு உயர்ந்துள்ளது.
இந்த ஆபத்தைத் தவிர்க்க, அல்லது குறைக்க 2009ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி 350.org என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 181 நாடுகளில் 5200க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளின் வழியாக நமது காற்று மண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு அளவைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இன்று அக்டோபர் 24. சுற்றுச் சூழலில் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவைக் குறைக்க நாம் எவ்வகையில் செயல்பட முடியும்? சிந்திப்போம்.







All the contents on this site are copyrighted ©.