2010-10-22 15:59:45

உலகில் சுமார் ஐம்பது கோடி குறுநில விவசாயிகள் பசியால் வாடுகின்றனர்: ஐ.நா.வல்லுனர்


அக்.22,2010: உலகில் சுமார் ஐம்பது கோடி குறுநில விவசாயிகள் பசியால் வாடுகின்றனர் என்றும், தொழிற்சாலைகள் அபிவிருத்தி, நகர்ப்புறமயம், சுற்றுச்சூழல் அழிவு ஆகியவற்றால் இவர்கள் தங்களது விவசாய நிலங்களை இழந்து வருவது இதற்கு ஒரு காரணம் என்றும் ஐ.நா.வல்லுனர் ஒருவர் எச்சரித்தார்.

ஐ.நா.பொது அவையில் இதனை அறிவித்த, உணவுக்கான உரிமை குறித்த ஐ.நா. வல்லுனர் Olivier De Schutter, நகர மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து வரும் தொழிற்சாலைகள், வீட்டுமனைகள் அதிகரிப்பு ஆகியவைகளால் சிறுவிவசாயிகள் தங்களது நிலங்களை இழந்து வருகின்றனர் என்றார்.

இந்தக் காரணங்களால் ஆண்டுதோறும் மூன்று கோடி ஹெக்டேர் விவசாய நிலங்கள் இழக்கப்பட்டு வருகின்றன என்றும் ஷூட்டர் தெரிவித்தார்.

இன்னும், 2007 க்கும் 2009 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கடுமையான சண்டைகளில் 55 விழுக்காட்டுக்கு அதிகமானவை சிறுபான்மை சமூகங்களிடையே கடும் பதட்டநிலைகளை உருவாக்கின என்று ஐ.நா.பொது அவையில் அறிவித்தார் சிறுபான்மை விவகாரங்கள் குறித்த வலலுனர் Gay McDougall.







All the contents on this site are copyrighted ©.