2010-10-21 15:18:58

பாகிஸ்தானில் திருடப்பட்ட திருப்பலி பாத்திரங்கள் மீட்பு


அக்.21,2010 - பாகிஸ்தான் கராச்சிக்கருகில் உள்ள கடற்கரைப்பகுதி கோவில் ஒன்றிலிருந்து திருடப்பட்ட திருப்பலி பாத்திரங்கள் மீண்டும் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.
நூறாண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த இப்பாத்திரங்கள் இவ்வாண்டு ஜூன் மாதம் திருஇருதய கோவிலிலிருந்து திருடப்பட்டன. அவற்றைக் காவல் துறையினர் அண்மையில் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
நவம்பர் முதல் தேதி கொண்டாடப்படும் அனைத்துப் புனிதர்களின் திருநாளன்று கராச்சி பேராயர் எவரிஸ்ட் பின்டோ தலைமையில் நடத்தப்படும் திருப்பலியில் திருடப்பட்ட இப்புனிதப் பொருட்கள் மீண்டும் அர்ச்சிக்கப்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இப்புனிதப் பொருட்கள் விலையுயர்ந்தவை என்பது ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் தலத்திருச்சபையின் பாரம்பரியப் பொருட்கள் இவை என்பது முக்கியமான ஓர் அம்சம் என்று திருஇருதய கோவிலின் பங்குத் தந்தை Inderias Rehmat கூறினார்.







All the contents on this site are copyrighted ©.