2010-10-21 15:19:21

படைக் கருவிகளின் செலவுகளைக் குறைக்கத் தவறியுள்ள பிரித்தானிய நிதி அறிக்கை குறித்து  Pax Christi  அமைப்பு கவலை


அக்.21,2010 - இச்செவ்வாயன்று பிரித்தானிய பாராளு மன்றத்தில் பாதுகாப்புப் படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் மறு பரிசீலனைக் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதென்று Pax Christi என்ற அமைதிக்கான கிறிஸ்தவ அமைப்பு ஒன்று இப்புதனன்று தன் கருத்தை வெளியிட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தின் அதிக அளவைப் பெறும் படைக் கருவிகளின் செலவுகளைக் குறைத்து, ஏழை மக்களின் வறுமையைக் களையும் முயற்சிகளை இந்த மறுபரிசீலனை முன்வைக்காமல் போனது பெரும் ஏமாற்றம் என்று Pax Christi யின் போது செயலர் Pat Gaffney கூறினார்.
பிரிட்டனில் இன்று நிலவும் பல்வேறு சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல், படைக் கருவிகளுக்கு மேலும் அதிகத் தொகை ஒதுக்கப்படுவது மக்கள் நலனில் அக்கறை இல்லாத சமூக விரோதப் போக்காகவும் கருதப்பட வேண்டும் என்று Pat Gaffney மேலும் கூறினார்.
இதற்கிடையே இந்த நிதி ஒதுக்கீடு பற்றிய மறு பரிசீலனை அறிக்கையின் படி, பிரிட்டனில் உள்ள பல வரலாற்று சிறப்பு மிக்கக் கோவில்களைப் பராமரிக்க ஒதுக்கப்பட்டுள்ள தொகையிலிருந்து 20 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதால், மக்கள் தாராள மனதுடன் அளிக்கும் கொடைகளின் உதவியாலேயே இக்கோவில்கள் இனி பரமாரிக்கப்பட வேண்டுமென்று இப்பராமரிப்புக் குழுவின் உயர் இயக்குனர் Crispin Truman கூறினார்.இப்பராமரிப்புக் குழுவின் கீழ் 340 மிகப் பழைமையானக் கோவில்கள் உள்ளதென்பதும், இவை மக்களின் வழிபாடுகளுக்கு மூடப்பட்டுள்ளனவென்பதும் குறிப்பிடத் தக்கவை.







All the contents on this site are copyrighted ©.